முன்னோடி முயற்சிகள்

“தடம் பார்தது நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவனே மாமனிதன்”- மகாத்மா காந்தி

 

என்ற மகாத்மாவின் மகாமந்திரத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் பூ.சா.கோ. அறநிலையத்தின்  முதல் நிறுவனமான பூ.சா.கோ. சர்வஜன மேனிலைப்பள்ளி கல்வித் துறையில் பல்வேறு வளர்ச்சிகளுக்கு பாதை அமைக்கும் – பாதை காட்டும் தகுதியும், தரமும் பெற்றது என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை.

கோயம்புத்தூரில் உள்ள எங்கள் பள்ளியின் “பல முதல்நிலைகள்” பின்வருமாறு:

ஆண்களும். பெண்களும் சேர்ந்து படிக்கும் கூட்டுக் கல்வி முறையை அறிமுகப்படுத்திய பள்ளி.

தமிழகத்தில் முதன்முறையாக பெண் உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்த பள்ளி.

கூடைப்பந்து விளையாட்டைக் கோவை மாவட்டத்தில்  முதல் முறையாக அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அதற்கான விளையாட்டுத் தளத்தையும் உருவாக்கிக்  காட்டிய பள்ளி.

அனைவருக்கும் சாரணியம்”, ‘ஒவ்வொருவருக்கும் பொழுதுபோக்கு”  முதலிய திட்டங்களை அறிமுகப்படுத்திய பள்ளி என்பதால், “செயற்பள்ளி்” (Activity School) என்று சிறப்பிக்கப் பெற்ற பள்ளி.

பொறியியல் கல்வியை தமிழ்நாட்டில் முதல்முதலாக உயர்நிலைப் பள்ளியில் 1948ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பள்ளி. 

1939-ல் தமிழ் வழியாகப் பாடங்களைக் கற்பிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  ஆனால், அதற்கு முன்பே 1929-ஆம் ஆண்டு முதலே வேதியியல் பாடத்தை தமிழில் கற்பித்த பள்ளி.

“தாய்மொழி மூலம் கல்வி கற்பதற்கு தமிழகத்தில் வித்திட்ட முதற்பள்ளி  கோவை பூளைமேட்டில் உள்ள சர்வஜன மேல்நிலைப் பள்ளி” என்று அன்னிபெசண்டு அம்மையாரால் பாராட்டப்பெற்ற பள்ளி. 

 

Madam Annie Besant

அன்னி பெசன்ட் மேடம்

 

இந்த முன்னோடி முயற்சிகள் அனைத்தும் பூ.சா.கோ. சர்வஜனா மேல்நிலைப் பள்ளிக்கு அவ்வப்போது விருதுகளைக் கொண்டு வந்துள்ளன.