பூ.சா. கோவிந்தசாமி நாயுடு

(1856 – 1918)

தகுதியான தந்தை

 

 

எங்கள் நிறுவனர்கள்,  பூ.சா.கோ. & மகன்கள் மற்றும் அவர்கள் கல்வியின் உன்னத நோக்கத்திற்கு செய்த பங்களிப்புகளின் வரலாறு மிகப்பெரியது.

 பூ.சா.கோவிந்தசாமி நாயுடு மற்றும் அவரது நான்கு மகன்களான பூ.சா.கோ. வெங்கடசுவாமி நாயுடு,  பூ.சா.கோ. ரங்கசாமி நாயுடு,  பூ.சா.கோ. கங்கா நாயுடு மற்றும்  பூ.சா.கோ. நாராயணசாமி நாயுடு ஆகியோர் மதிப்புமிக்க பூ.சா.கோ. அறக்கட்டளையின் நிறுவனர்கள்.

 

 

பூ.சா.கோ. வேங்கடசாமி நாயுடு

(1879 – 1965)

 பூ.சா.கோ. அரங்கசாமி நாயுடு

(1882-1947)

பூ.சா.கோ. கங்கா நாயுடு

(1889-1949)

 பூ.சா.கோ. நாராயணசாமி நாயுடு

(1892-1938)

புகழ்பெற்ற மகன்கள்

 

 “என்னுடைய குடும்பவளத்தை அனைவரின் நலத்திற்கும்  அர்ப்பணிக்கும்  அறச்சிந்தனை என்றும் என்னுள் நிலைத்திருக்கட்டும் ”-  பூ.சா. கோவிந்தசாமி நாயுடு

 

தமது அயராத உழைப்பால் விளைந்த செல்வத்தை. சமுதாயச் செழிப்பிற்காக விதைத்த  இந்நால்வரால் உருவானதே பூ.சா.கோ. அறநிலையம்.  இந்நால்வரின் சீரியப்பணிகளை வெறும் சொற்களால் வடிக்க நினைப்பது. கங்கையை  சங்கில் அடைக்க நினைக்கும் சிறுபிள்ளைத்தனம் என்றாலும் கூட, வரலாறு படைத்தவர்களின் வரலாறு, வருங்கால சந்ததிகளுக்காக  வழிகாட்டும் என்பதால் வடிக்கப்பட்டதே இச்சொற்சித்திரம்.