பாடத்திட்டச் செயல்பாடுகள்

பள்ளியில் பாடத்திட்டம் சார்ந்த செயல்பாடுகள் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் மேம்படுத்துவதில் அத்தியாவசியமான பங்கு வகிக்கிறது.

வகுப்பறை

மிகச் சிறந்த வகுப்பறை சூழல் என்பது பாடங்களை கற்பதில் மிகுந்த ஆர்வத்தையும்,கலந்துரையாடலையும் தூண்டக் கூடிய படைப்பாற்றல் உத்திகளை உடையதாக இருக்க வேண்டும்.

தேர்வுகள்

தேர்வுகள் மாணவர்களின் கற்றல் மேம்பாடுகளையும்,கற்றல் குறைபாடுகளையும் மதிப்பிட உதவுகிறது.இது மாணவர்களின் சுயமதிப்பீட்டிற்கான கருவியாக அதிக அளவு பயன்படுகிறது.

நூலகம்

புத்தகங்கள் படிப்பதில் ஈடுபடும் மாணவர்கள், அவர்களின் தகவல் தொடர்பு திறனை கூர்மைப்படுத்த உதவுகிறது.

ஆய்வகங்கள்

ஆய்வகச் செயல்பாடுகளின் ஈடுபடுவதன் விளைவாக மாணவர்களின் தலைமை பண்பு மேம்படுகிறது.

கணினி சார்ந்த படிப்புகள்

ISO 9000-2008 சான்றிதழ் பெற்ற புகழ் பெற்ற “டெக்னோ ஸ்கூல்” எனும் நிறுவனமானது தொழில் நுட்பக் கல்வியில் ஒரு புதிய பரிபமாணத்தை நமது பள்ளியில் அறிமுகப்படுத்தியுள்ளது.இம்முறையின் படி மாணவர்கள் கணினி கல்வியின் அடிப்படை கோட்பாடுகளையும்,கற்பித்தல்,கற்றல்,சரிபார்த்தல் மற்றும் மதிப்பிடுதல் முதலிய முறைகளில் பல்வேறு கற்றல் உத்திகளைக் கொண்டு தரப்படும் பயிற்சிகளால் எளிதாகக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஒவ்வோறு வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் பின்வருமாறு

TECHO-2

MICROSOFT ACCESS-2007

MICROSOFT FRONT PAGE 2008

FUNDAMENTALS OF C LANGUAGE

MICROSOFT EXCEL-2007

HTML BASIC

FLASH INTRODUCTION

MS WORD 2007  ஓர் அறிமுகம்

QBASIC – நிரலாகம்

விளையாட்டு

மாணவர்களின் மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

PHASE – செயல்பாடுகள்

நமது பள்ளியில் பூ.சா.கோ கல்வி நிலையத்தின் பெருமை மிகு முன்னாள் மாணவரும், சர்வதேச விளையாட்டு வீரரூமான திரு சபரி கார்த்திக் என்பவரால் தொடங்கப்பட்ட முனன்னி விளையாட்டு நிறுவனமான PHASE விளையாட்டு குழுவுடன் இணைந்து PHASE – Physical Health and sports Edulatien எனும் திட்டமானது செயல்படுத்தப்பட்டது இத்திட்டத்தில் கீழ் மாணவர்களுக்கு தேக ஆரோக்கியம்,சுகாதார விழிப்புணர்வு,வாழ்க்கை திறன்கள் மற்றும் விளையாட்டுத் திறன்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான பயிற்சி வழங்கப்பபடுகிறது மகிழ்ச்சி நிறைந்த செயல்பாடுகளின் மூலம் மாணவர்களின் உடற்கல்வியறிவு விளையாட்டு திறன்கள் மற்றும் உடற்பயிற்சி அளவுருக்களை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதனுடன் சேர்த்து இந்நிறுவனமானது ‘விளையாட்டு உரிமை” என்ற முயற்சியுடன் நமது நிறுவனத்தின் சலுகையுடன் பயிலும் மாணவர் இல்ல மாணவர்களுக்கு தமிழர் பாரம்பரியக் கலையான சிலம்பாட்டம் பயிற்சி அளிக்கப்படுகிறது இந்த திட்டத்தில் தமது ஆரோக்கியத்தையும், திறன்களையும் மேம்படுத்த குழநதைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கு பெறுவதை நாம் கண்கூடாகபார்க்கிறோம்.