விளையாட்டில் ஆசிரியர்களின் சாதனைகள்

எங்கள் பள்ளியில் முன்னாள் ஆசிரியர் மற்றும் மாணவருமான C.சுவாமிநாதன் அவர்கள் 1971-1972-இல் தமிழ்நாடு மாநில கால்பந்து அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் கோவாவில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார்.

நம் பள்ளியின் முன்னாள் வணிகவியல் ஆசிரியர்  M.சுரேந்தர் அவர்கள் தமிழ்நாடு மாநில அளவிலான கூடைப்பந்து அணியில் பயிற்சியாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.வருடம் 2000-ல் இந்திய கூடைப்பந்து பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார்.

நமது தற்போதைய செயலர் P.நாராயணசாமி அவர்கள் தனது பள்ளி நாட்களில் 1971-ம் ஆம் ஆண்டு 800 மீட்டர் ஒட்டப்பந்தியத்தில் புதிய மாநில சாதனை படைத்தார்.

முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் K.குப்புசாமி அவர்கள் மூத்தவர்களுக்கான 100 மீட்டர் தடகள போட்டியில் வெற்றி பெற்றார். 1990-91-ல் (4X100) மீட்டர் தொடர் ஒட்டப் பந்தயத்தில் மூன்றாமிடம் பெற்றார்.2000-2001-ஆம் ஆண்டில் 11வது ஆசிய அளவிலான தடகள போட்டியில் 4X100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்றார் மேலும் முதன்மை வெற்றியாளராகத் திகழ்ந்தார்.

தற்போது உடற்கல்வி இயக்குநர் P.ஜெயசந்திரன் கூடைப்பந்து போட்டிக்கான தேசிய நடுவராகப் பணியாற்றுகிறார்.மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு நடுவராக விளங்குகிறார்.தமிழ்நாடு மாநில கூடைப்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.

பெயர்ஆண்டுநிகழ்வுநிலை
C.சுவாமிநாதன்1971 & 1972கோவா சந்தோஷ் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றிதமிழ்நாடு மாநில கால்பந்து அணி
M.சுரேந்தர்2000தமிழ்நாடு மாநில அளவிலான கூடைப்பந்துஇந்திய கூடைப்பந்து பெண்கள் அணிக்கு பயிற்சியாளர்
P.நாராயணசாமி1971800 மீட்டர்மாநில சாதனை
K.குப்புசாமி1990-1991 (4X100) மீட்டர் தொடர் ஒட்டப் பந்தயத்தில் மூன்றாமிடம் 4X100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம்முதன்மை வெற்றியாளர்
K.குப்புசாமி2000-2001 மூத்தவர்களுக்கான 100 மீட்டர் தடகள போட்டி11வது ஆசிய அளவிலான தடகள போட்டியில் 4X100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம்