பூ.சா. கோ.மாணவர் இல்லம்

பீளமேடு, கோயம்புத்தூர் – 641 004.

உலக முழுவதும் சிறுவர்களின் கல்விக்கு,தங்கள் பெற்றோர்களே உறுதுணையாக உள்ளனர்.அவ்வாறு பெற்றோர்களின் துணையும்,வழி காட்டுதலும் அனைத்து சிறுவர்களுக்கும் கிடைப்பதில்லை,குடும்பத்தின் அசாதாரண சூழல் காரணமாக மாணவர்களாக வேண்டிய சில சிறுவர்கள்,குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சூழல் உருவாக நேரிடுகிறது.

பூ.சா.கோ. அறக்கட்டளை மாணவர்கள் கல்வியில் மேம்பட்ட நிலையை அடைவதற்கான பல வழிமுறைகளை மேற்கொள்வதோடு,மாணவர்களின் நிலை மேம்பட பல்வேறு சமூகப் பணிகளிகளும் இடுபட்டு வருகிறது. மாணவவர்களுக்குத் தேவையான கல்வி மற்றும் திறன்களை வழங்கி,அவர்களை சமூகத்தில் நல்ல நிலையை அடையத் தேவையான உதவிகளை வழங்கிவருகிறது.

 

திரு.ஜி.ஆர். கார்த்தியேன்

PSG மாணவர் இல்லம், பூ.சா.கோ. அறக்கட்டளையின் மூலம் நிறுவப்பட்டுள்ளது, வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்களுக்கு கல்வி,உணவு.இருப்பிடம்.உடைகள் மற்றும் மருத்துவ வசதி ஆகியைவற்றை இலவசமாக வழங்கி,அவர்களை வாழ்வில் உயர்த்தும் வண்ணம் செயலாற்றி வருகின்றது.

பூ.சா.கோ. அறநிலைத்தை தோற்றுவித்தவர்களும்,அதை வழிநடத்தி வந்துள்ளவர்களும் ‘நிறுவன சமுதாய நலன்”(Corporate Social Responsibility) என்ற நவீன சிந்தனையை பல்லான்டுகளாக,பல்வேறு சமூகத் தொண்டுகளை ஆற்றி, அறநிலையத்தால் நடத்தி வந்துள்ளனர்.

பூ.சா.கோ. மாணவர் இல்லம் பூ.சா.கோ. அறநிலைத்தால் நடத்தப்பட்டு வருகின்றது.இது ஜீன் 1995 ஆம் ஆண்டு,அப்போதைய நிர்வாக அறங்காவலர் திரு.ஜி.ஆர். கார்த்தியேன் அவர்களால் நிறுவப்பட்டது தாய் அல்லது தந்தை இழந்த மாணவர்களுக்கு தமிழ் வழியில் ஒன்றாம் வகுப்பு முதல் கலலூரி பட்டப்படிப்பு வரை

மாணவர் விடுதி பூ.சா.கோ. கல்வி நிறுவனங்களின் முன்னாள் அறங்காவலர் அவர்கள் பூ.சா.கோ. சர்வவஜன மேல்நிலைப் பள்ளி வலாகத்தில்,1995 ஆம் ஆண்டு, 33 மாணவர்களுடன் தொடங்கி வைத்தார் இன்று விடுதியானது விரிவு படுத்தப்பட்டு 150 மாணவர்களுடன் இயங்கி வருகிறது இது தற்போதைய நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபாலகிருஸஷ்ணன் அவர்களின் தாராள சிந்தனையோடு, நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

Number of Students/inmates admitted to Colleges

S NoName of the College/ institutionNumber of Students
1PSG Polytechnic College04
2PSG Industrial Institute01
3PSG College of Arts & Science02
TOTAL07

Grand Total of inmates = 143 + 07 = 150 (One hundred and fifty only)

Details of Staff

S NoDesignationNumber
1Warden03
2Cook01
3Assistant Cook01
4Kitchen Helper01
TOTAL06

மாணவர்கள் விடுதியில் சேர தகுதிகள்:

6 முதல் 9ம் வகுப்பு வரையிலும்,11-ம் வகுப்பிற்கும் மாணவர்கள் விடுதியில் சேர அனுமதிக்கப்படுவார்;.பொருளாதாரத்தில் பின்தங்கிய, தாய் அல்லது தந்தையை இழந்தவர்களும்,பெற்றோர்களில் இருவரையும் இழந்தவர்களும் சோத்துக் கொள்ளப்படுகின்றனர்..

மாணவர்களுக்கான அறப்பணிகள்:

மாணவர்களுக்கு இலவசமாக உயர்நிலைக்கல்வி,மேல்நிலைக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை வழங்குதல்.

மாணவர்களுக்கு இலவசமாக உணவு,உடை,பாடபுத்தகங்கள் உபகரணஙங்கள் வழங்புதல்.

விளையாட்டிலும்,பிற துறைகளிலும் சிறப்பு பயிற்சி அளித்தல்.

மாணவர்களுக்குத் தேவையான ஆக்கமும்,ஊக்கமும் வழங்கி மேற்படிப்பு பயில வாய்ப்புகள் அளித்தல்.

விடுதி மாணவர்களுக்கு பால் மற்றும் முட்டையுடன் சத்தான உணவு வழங்குதல்.

அரம்ப நிலையில் ஓடுகளால் வேயப்பட்ட கட்டிடத்தில் மாணவர் விடுதி நிறுவப்பட்டு,2008 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்தது.பின்னர் அது நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு,தற்பொழுது  இரு தளங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் தகுதியான பல மாணவர்களுடன் விடுதியில் இடம் வழங்கும் பொருட்டு,6451 சதுர அடியில் ரூ 2 கோடி செலவில் செய்ல்பட்டு வருகிறது.

 

விடுதியின் முன்னாள் மாணவர்கள்

விடுதி மாணவர்கள் சமுதாயத்திற்குத் தொண்டாற்றிட பல வழிகளில் உருவாக்கப்படுகின்றனர்.முன்னாள் விடுதி மாணவர்கள் பலர் பொறியாளர்களாகவும்,மருத்துவர்களாகவும் உள்ளனர் பல துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

மாணவர் இல்லத்தில் நடைபெறும் விழாக்கள்

முக்கிய பண்டிகைகளும்,தேசிய விடுமுறை நாட்களும் மாணவர் இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.தீபாவளிப் பண்டிகையின் போது விடுதி மாணவர்களுக்கு புத்தாடைகள்,பட்டாசுகள்,சிறப்பு மதிய விருந்தும்,இரவு உணவும் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

விடுதிக் காப்பாளர்கள்

பி.மாரியப்பன் 1995-1997

எஸ்.குமாரசாமி 1997-1998

பி.அழகுபாண்டியன் 1998-2004

அருள் பிரகாசம் 2005

ஆர்.பாலசுப்ரமணியம் 2005-2015

எஸ்.ராஜ்குமார் 2015-2016

எஸ்.வேலுசாமி 2016-2022 ……………………………………… முதல்

மாணவர் இல்லக் குழு உறுப்பினர்கள்

 

எஸ்.கோபால கிருஷ்ணன்  பூ.சா.கோ.அறநிலைய அறங்காவலர்

நா.சி.நந்தகோபால், பூ.சா.கோ.பள்ளிகளின் செயலர்

பி.நாராயனசாமி, பூ.சா.கோ. சர்வஜனமேல் நிலைப்பள்ளி செயலர்

என்.சசிக்குமார் பூ.சா.கோ. சர்வஜனமேல் நிலைப்பள்ளி தலைமையசிரியர்

—————–மாணவர் விடுதிக் காப்பளார்கள்

 

            வசதிகள்:

மாணவர் இல்லம் நவீன சாதனங்களை உள்ளடக்கிய சமையல் அறை, உணவு பரிமாறும் இடம்,மாணவகளுக்கான தனித்தனி அறைகள்,குளியலறை மற்றும் கழிப்பிடங்களை உள்ளடக்கியது மாணவர்களுக்குத் தனிதனியாக கட்டில்கள் மெத்தைகள், தலையணைகள், போர்வைகள்,உணவுத்தட்டுகள் வழங்கப்படுகின்றன.

தினசரி நடவடிக்கைகள்

    • காலை 5.00 மணிக்கு மாணவர்கள் விதித்தெழுதல்
    • காலை 5 மணி முதல் 6 மணிவரை  யோகா
    • காலை 6 மணி முதல் 7 மணிவரை படித்தல் நேரம்
    • காலை 7.30 மணி  முதல் 8 மணிவரை அறையை சுத்தம் செய்தல்
    • காலை 8 மணி முதல் 8.30 மணிவரை காலை உணவு
    • காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை பள்ளி நடவடிக்கைகள்
    • மாலை 5 மணி முதல் மாலை 5.45மணிவரை விளையாட்டு
    • மாலை 6 மணி முதல் 8 மணி வரை படித்தல் நேரம்
    • இரவு 8 மணி முதல் 8.30 மணிவரை இரவு உணவு
    •  இரவு 8.30 மணி முதல் 9.30.மணிவரை படித்தல் நேரம்

 

  காலை,மாலை இரு நேரங்களிலும் வழிபாட்டு கூட்டங்கள் தினந்தோறும் நடத்தபடுகிறது.

ஆண்டு சுற்றுலா

ஆண்டிற்கொரு முறை, மாணவர் இல்லக் குழந்தைகள் நிர்வாகத்தினர் உதவியுடன், அருகிலுள்ள இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் கல்வி சிறந்து விளங்கிய இரு மாணவர்கள் 3 நாட்கள் கல்வி சுற்றுலாவாக பெங்களுரூ மற்றும் மைசூர் நகரங்களுக்கு, தற்போதைய நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபாலககிருஷ்ணன் அவர்களின் எற்பாட்டின்படி அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

Dermatology camp in our Manavar illam residents Psg IMSR

Mrs.Krishnaveni mam donated carrom board,chess,shuttle- ladies circle

Dr.Ramanathan principal of PSG pharmacy college donated sports goods

Dr.Ramanathan principal of PSG pharmacy college donated sports goods

celebrations

ஆண்டு விழா கொண்டாட்டம் – 01.09.2024

Manavar-illam
Manavar-illam
Manavar Illam
Manavar Illam
Manavar Illam
Manavar Illam
Manavar Illam
Manavar Illam
Manavar Illam
Manavar Illam
Manavar Illam

தீபாவளி கொண்டாட்டம் – 28.10.2024

diwali-celebration-2024
diwali-celebration-2024